மேலும் செய்திகள்
அறக்கட்டளை நிறுவனர் தினவிழா
25-Aug-2025
சிவகங்கை : சிவகங்கையில் விஸ்வகர்மா பொதுநல பூங்கா அறக்கட்டளைக்கு உட்பட்ட சனீஸ்வரன் கோயில் வளாகத்தில் விஸ்வ பிரம்மா கோயிலில் யாகசாலை பூஜையுடன் ஜெயந்தி விழா நடந்தது. சுவாமிக்கு அபிேஷக ஆராதனை செய்தனர். அறக்கட்டளை தலைவர் எம்.முத்துராமலிங்கம், செயலாளர் எஸ்.கோபிநாத், பொருளாளர் எம்.ராமசந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் கோபாலாச்சாரி முத்துக்குமரன், விஸ்வகர்ம கைவினைஞர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.முத்துக்குமார், விஸ்வ கர்ம சமூக சங்க தலைவர் டி.செல்வராஜ், செயலாளர் பி. பழனி, பொருளாளர் இளங்கோ, நிர்வாகிகள் பங்கேற்றனர்.
25-Aug-2025