மேலும் செய்திகள்
வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
27-Nov-2024
சிவகங்கை: மாவட்டத்தில் 2 வது நாளாக வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், அனைத்து கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.8 அம்ச கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். இரண்டாவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களில் பணிபுரிந்த 406 ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.சிவகங்கை மட்டுமின்றி அனைத்து கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களில் பணிகளை புறக்கணித்து வருவாய்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27-Nov-2024