மானாமதுரையில் இன்று வாரச்சந்தை
மானாமதுரை: பொங்கல் விடுமுறையால் மானாமதுரையில் நேற்று நடைபெற இருந்த வாரச்சந்தை இன்று வெள்ளிக்கிழமை நடக்கிறது. மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக் கிழமை வாரச்சந்தை நடைபெறும். மதுரை, சிவகங்கை, திருப்புவனம் திருப்பாச்சேத்தி இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்வர்.பொங்கல் பண்டிகை காரணமாக மதுரை மொத்த மார்க்கெட்டிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மானாமதுரையில் நேற்று நடைபெற வேண்டிய வாரச்சந்தை இன்று வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.