உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேவை மைய கட்டடத்தில் கடை புதிய கட்டடம் திறப்பு எப்போது

சேவை மைய கட்டடத்தில் கடை புதிய கட்டடம் திறப்பு எப்போது

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ஓ. சிறுவயலில் ரேஷன் கடை ஊராட்சி கிராம சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓ.சிறுவயலில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு உள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே, பழைய கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அபாயம் நிலவியது. இதனால் பழைய கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் ரேஷன் கடை கடந்த பல மாதங்களாக இயங்கி வருகிறது. ஊரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடத்திற்கு வயதானவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டும் பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. புதிய ரேஷன் கடை கட்டடத்தை விரைவில் திறந்து, ரேஷன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ