உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காட்டு மாடு, மான் தொல்லை; திருப்புத்துாரில் விவசாயம் பாதிப்பு

காட்டு மாடு, மான் தொல்லை; திருப்புத்துாரில் விவசாயம் பாதிப்பு

திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியம் வேலங்குடி வனப்பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருப்புத்துார் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது வேலங்குடி வனப்பகுதி. இங்கு தற்போது மான்கள், மயில்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. புதிய வரவாக கடந்த சில ஆண்டுகளாக காட்டெருமைகளும் வரத்துவங்கியுள்ளன. இதனால் இப்பகுதி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பூலாம்பட்டி, கொன்னத்தான்பட்டி விவசாயிகள் கூறுகையில், அதிகாலையில் காட்டெருமைகள் வந்து நெல், சோளக்கதிர்களை தின்று விடுகிறது. மான்கள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. குரங்குகள் தென்னங்குரும்பைகளை பறித்து சேதமாக்கி விடுகிறது.' என்றனர். இதனால் விவசாயிகள் வனப்பகுதியை சர்வே செய்து எல்லையை வேலியிட்டு வன உயிரினங்கள் ஊருக்குள்,விவசாய நிலத்திற்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையினரை கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ