உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் - வேன் மோதல் தொழிலாளி பலி

டூவீலர் - வேன் மோதல் தொழிலாளி பலி

சிங்கம்புணரி: மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா பெருங்காலக்குடியைச் சேர்ந்தவர் அடைக்கலம் மகன் முருகன் 29, கட்டடத்தொழிலாளி. இவர் நேற்று திருப்புத்துாரில் வேலை முடித்துவிட்டு டூவீலரில் ஊருக்கு திரும்பியுள்ளார். கொள்ளுகுடிப்பட்டி பறவைகள் சரணாலயம் பகுதியில் வந்தபோது, தேனியில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு பக்தர்களை ஏற்றிவந்த வேன் மோதியதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ