தல்லாகுளம் முனீஸ்வரர் கோயிலில் பூஜை
மானாமதுரை: மானாமதுரை தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயில் கிடா வெட்டு அன்னதான பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் ஏராளமான பக்தர்கள் ஆடு கோழிகளை பலியிட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று கிடாவெட்டு அன்னதான பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். நேற்று அதிகாலை சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.