உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஞ்சள் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் 

மஞ்சள் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் 

சிவகங்கை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் இன்றி செயல்படும் பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனங்களுக்கு 'மஞ்சள் பை விருது' வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பாலிதீன்களுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த தலா 3 பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சள் பை விருதுகள் வழங்கப்படும்.இதற்கு முதல் பரிசு ரூ.10 லட்சம், 2ம் பரிசு ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்ப படிவத்தை கலெக்டர் அலுவலக இணையதளம் http://sivaganga.nic.in-ல் பதிவிறக்கம் செய்து, உரிய ஆதாரங்களுடன் 2 பிரதிகள் எடுத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கையில் மே 1ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை