நகை மதிப்பீட்டாளரை ஏமாற்ற முயற்சி வாலிபர் கைது
சிவகங்கை: மதகுபட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி நகை மதிப்பீட்டாளர் திலகவதி 38. நேற்று முன்தினம் மதியம் 1:45 மணிக்கு இவர் பணியில் இருக்கும் போது, பொண்குண்டுபட்டியை சேர்ந்த கார்த்திக் 31, என்பவர் 5 பவுன் செயினை அடகு வைக்க வந்திருந்தார். நகை மதிப்பீடு செய்தபோது, செயின் தகடு போலவும், அதன் உள்ளே அரக்கு அதிகம் சேர்த்து எடை அதிகமாகி காண்பித்து அதிக பணம் பெறும் நோக்கில், நகைமதிப்பீட்டாளரை ஏமாற்ற முயற்சித்தார். இது குறித்து மதகுபட்டி போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.