உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

திருப்புத்துார்: திருப்புத்துார் சீதளி குளத்தில் நீரில் மூழ்கி இறந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று காலை சீதளி குளத்திற்கு வந்தவர்கள் குளத்தின் நடுவில் உடல் மிதப்பதைப் பார்த்தனர். இது குறித்து போலீஸ்,தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் குளத்திற்குள் மிதவையில் சென்று உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் செட்டியதெரு செல்வம் மகன் காளிமுத்து32. என்பது தெரியவந்தது.நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவர் குளத்தில் மூழ்கி இறந்து சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை