உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  இளையான்குடி அருகே வாலிபருக்கு வெட்டு; போதை கும்பல் மோதலால் பதட்டம்

 இளையான்குடி அருகே வாலிபருக்கு வெட்டு; போதை கும்பல் மோதலால் பதட்டம்

இளையான்குடி: இளையான்குடி அருகே ஆழிமதுரை பஸ் ஸ்டாப்பில் மது அருந்திய போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டதில் பட்டியலின வாலிபர் வெட்டப்பட்டார். அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த பட்டியலின வாலிபர் இளஞ்செழியன் 38. பஸ் ஸ்டாப் அருகே நேற்று இரவு மது அருந்தினார். அப்போது குமாரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கருண்ரோஹித் (எ) மண்டைக்கறி 23, என்பவரும் மது அருந்தியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ரோகித் தனது நண்பர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்தார். இரண்டு டூவீலர்களில் 3 பேர் வந்தனர். அதில் ஒருவர் வைத்திருந்த வாளை வாங்கி இளஞ்செழியன் தலையில் ரோஹித் வெட்டினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் இளஞ்செழியன் சேர்க்கப்பட்டார். இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனில் ரோஹித் சரணடைந்தார். சில வாரங்களுக்கு முன்பு இளமனூர் கிராமத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு போலீசார் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் இளையான்குடி மற்றும் பரமக்குடி பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பிய நிலையில் நேற்று இரவு அதே இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பதட்டம் நிலவுவதால் இளையான்குடி, பரமக்குடி பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை