உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

காளையார்கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

சிவகங்கை; காளையார்கோவில் அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நெடுவத்தாவு கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார், 29, சிவசங்கர், 28. நண்பர்களான இருவருக்கும், வேறு சிலருடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இருவரும் இருப்பான்பூச்சி கிராமம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு கும்பல், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பியது. இதில், சரத்குமார் அதே இடத்தில் இறந்தார். சிவசங்கர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை