உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  ரயில் மோதி 50 ஆடுகள் பலி

 ரயில் மோதி 50 ஆடுகள் பலி

தென்காசி, : தென்காசி அருகே ராமச்சந்திரபட்டினம் பகுதியில் ரயிலில் அடிபட்டு 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. பாவூர்சத்திரம் அருகே சடையப்பபுரத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர் அருகிலுள்ள தோட்டத்தில் கிடை போட்டிருந்தார். செங்கோட்டையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று அதிகாலை நேரத்தில் ஆடுகள் தண்டவாளத்தில் நின்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தென்காசி ரயில்வே போலீசார், செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆடுகளின் உடல்கள் தண்டவாளம் அருகே சிதறிக் கிடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ