உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / ஆலங்குளம் பேரூராட்சி தி.மு.க., தலைவி பதவி பறிப்பு

ஆலங்குளம் பேரூராட்சி தி.மு.க., தலைவி பதவி பறிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவியாக இருந்த தி.மு.க.,வை சேர்ந்த சுதா தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். 2021ல் நடந்த தேர்தலில் ஆலங்குளம் பேரூராட்சி 7ஆம் வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு சுதா வெற்றி பெற்றார். பின் பேரூராட்சி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், 2022ல் சுதாவிற்கு சொந்தமான குடியிருப்பு, வணிக வளாகங்களுக்கு சொத்து வரி செலுத்தவில்லை எனக்கூறி, 9வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், சென்னை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். விசாரணை செய்த நீதிமன்றம், சுதாவின் 7வது வார்டு உறுப்பினர் பதவியையும் பேரூராட்சி தலைவர் பதவியையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையும் அந்த மனுவை விரைந்து விசாரணை செய்து ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வெங்கடகோபு, சுதாவை பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததாக அறிவித்தார். ஏற்கனவே, சுதாவிற்கு சொத்து வரி செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும், பணம் கட்டாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுதாவிடம் தகுதி நீக்கம் தொடர்பான ஆணையையும் பேரூராட்சி அதிகாரிகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை