உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / நிதிமுறைகேடு புகார்; ஊராட்சி தலைவர் டிஸ்மிஸ்

நிதிமுறைகேடு புகார்; ஊராட்சி தலைவர் டிஸ்மிஸ்

தென்காசி; தென்காசி அருகே ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததாக பெண் தலைவரை பதவி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சி தலைவர் முத்துமாலையம்மாள். இவரது கணவர் மதிச்செல்வன். தி.மு.க., பிரமுகர்.முத்துமாலையம்மாள் ஊராட்சி நிதியை முறைகேடு செய்து அரசுக்கு நிதியிழப்பு செய்ததாக புகார் எழுந்தது. இப்பிரச்னையில் கலெக்டர் கமல்கிஷோர் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானுார் ஊராட்சி தலைவராக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த குத்தாலிங்கராஜன் நிதிமுறைகேடு புகாரில் சில மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை