உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / கமிஷன் கேட்டு யூனியன் தலைவருடன் தி.மு.க., கவுன்சிலர் வாக்குவாதம்

கமிஷன் கேட்டு யூனியன் தலைவருடன் தி.மு.க., கவுன்சிலர் வாக்குவாதம்

தென்காசி:தென்காசி பஞ்சாயத்து யூனியனில் 9 வார்டுகள் உள்ளன. 8 கவுன்சிலர்கள் தி.மு.க.,, ஒருவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். தலைவராக தி.மு.க.,வின் ஷேக் அப்துல்லா உள்ளார். பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது கருத்து வேறுபாட்டால் துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என தி.மு.க., அ.தி.மு.க ; கவுன்சிலர்கள் தெரிவித்து கூண்டோடு வெளிநடப்பு செய்தனர்.இந்நிலையில் 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலரும் தென்காசி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளருமான அழகுசுந்தரம் தென்காசியில் போடப்பட்ட சாலைகளுக்கு, கவுன்சிலருக்கு தர வேண்டிய கமிஷன் தொகையை கேட்டு யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்தார்.தலைவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஒருவர் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ வைரலானது.தி.மு.க., துணைத்தலைவருக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த 8 திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்ததும், ஒரு தி.மு.க., கவுன்சிலரின் வாக்குவாதத்தை அதே கட்சியினரே வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதும் உட்கட்சி பூசலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rpalni
டிச 22, 2024 09:28

திருட்டு குடும்பமும் த்ரவிஷ கும்பலும் தமிழகத்தை மீள முடியாத நரக ஊழலுக்குள் இழுத்துச் சென்று விட்டனர். ஒரே விடிவெள்ளி அண்ணாமலை ஆட்சியே


புதிய வீடியோ