உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / ரூ.60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அதிகாரி கைது

ரூ.60 ஆயிரம் லஞ்சம்; கல்வி அதிகாரி கைது

தென்காசி : தென்காசியில் பள்ளி ஆசிரியைக்கு அனுபவச் சான்று வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பரிமளா. திருவேங்கடம் தாலுகா செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் தனியார் பள்ளியில் ஆசிரியையாக சில ஆண்டுகள் பணியாற்றினார்.அங்கு பணியாற்றியதற்கான அனுபவச் சான்றிதழ் கேட்டார். அந்தப் பள்ளியின் தாளாளர் நாகராஜ் அனுபவ சான்றிதழை தயாரித்து அதில் மேலொப்பம் பெறுவதற்காக தென்காசியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றும் சுரேஷ்குமார் 52, அனுபவ சான்றிதழில் கையொப்பமிட ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டார்.பிறகு பேச்சுவார்த்தையில் ரூ.60 ஆயிரமாவது தருமாறு கேட்டார். இது குறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால் சுதரிடம் நாகராஜ் புகார் செய்தார். டி.எஸ்.பி. தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, எஸ்.ஐ., ரவி உள்ளிட்டோர் கல்வி அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். ரூ.60 ஆயிரம் லஞ்சப்பணத்தை வாங்கியதும் சுரேஷ்குமாரை கைது செய்தனர். பாவூர்சத்திரத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ