உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / காட்டு மாடு தாக்கி விவசாயி பலி ரூ. 50 ஆயிரம் நிவாரணம்

காட்டு மாடு தாக்கி விவசாயி பலி ரூ. 50 ஆயிரம் நிவாரணம்

தென்காசி:தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி கருப்பசாமி (68), வயலில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காட்டு மாடு வந்து தாக்கியது. தப்பிக்க முயன்ற கருப்பசாமி மண்வெட்டியால் காட்டு மாட்டை தாக்கினார். மாடு முட்டியதில் கருப்பசாமி உயிரிழந்தார். மாடும் உயிரிழந்தது. சம்பவ இடத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதல் கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை