உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: 3 பேர் பலி * 8 பேருக்கு சிகிச்சை

தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: 3 பேர் பலி * 8 பேருக்கு சிகிச்சை

தென்காசி:தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே கீழபாட்டாகுறிச்சி முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையால் மூன்று பேர் இறந்தனர். மேலும் 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.கீழபாட்டாகுறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் அன்னை முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். 60 பேர் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. உணவு ஒவ்வாமையால் 11 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் 48, முருகம்மாள் 45, சொக்கம்பட்டியைச் சேர்ந்த அம்பிகா 40, இறந்தனர். இருவரது நிலை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.முன்னெச்சரிக்கையாக முதியோர் இல்லத்தில் இருந்த 24 பெண்கள் உள்ளிட்ட 46 பேரும் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். எஸ்.பி., அரவிந்த், சுகாதார அலுவலர் கோவிந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் மற்றும் டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதியோர் இல்லத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.காரணம் என்ன: மே 8 ல் வெளிநபர்கள் வாங்கிக் கொடுத்த இறைச்சியை உணவாக சமைத்துள்ளனர். அதை மீண்டும் மீண்டும் சசூடாக்கி சாப்பிட்டதால் உணவு ஒவ்வாமையாகியுள்ளது. சாம்பவர் வடகரை போலீசார் தற்செயல் இறப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை