மேலும் செய்திகள்
கல்லுாரி அதிபர் வீட்டில் 100 சவரன் கொள்ளை
30-Jun-2025
ஆலங்குளம் : ஆன்லைனில், 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்து திரும்ப வராததால், நான்கு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சி.எஸ்.ஐ., சர்ச் தெருவை சேர்ந்தவர் சுமைத்துாக்கும் தொழிலாளி அருண்பாண்டி. இவரது மனைவி ஸ்டெல்லா எஸ்தர், 27. இவர்களுக்கு, மூன்று மகள்கள் மற்றும் மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.'வாட்ஸாப்'பில் வந்த தகவலில், ஆன்லைன் விளையாட்டு மூலம் பணம் சம்பாதிக்க, ஸ்டெல்லா எஸ்தர் ஆசைப்பட்டு, 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாற்றமடைந்தார்.மனமுடைந்த ஸ்டெல்லா எஸ்தர், தாய் வீட்டிற்கு சென்று நான்கு குழந்தைகளை விட்டு, அருகில் மாட்டு தொழுவத்தில் பூச்சிக் மருந்தை குடித்தார். மயங்கிய அவரை உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
30-Jun-2025