உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / நகைக்காக காதலி கொலை கள்ளக்காதலனுக்கு ஆயுள்

நகைக்காக காதலி கொலை கள்ளக்காதலனுக்கு ஆயுள்

தென்காசி:11 பவுன் நகைக்காக கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்து சாக்கு மூடையில் வீசியவருக்கு தென்காசி அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தென்காசி மாவட்டம் புளியங்குடி போலீஸ் எல்கை நெற்கட்டும்செவல் பகுதியில், 2013 ல் சாக்கு மூடையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடைத்தது. விசாரணையில், சங்கரன்கோவில் குருக்கள்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் மனைவி வள்ளித்தாய் (எ) வசந்தா (25) என்பதும், அவரை கள்ளக்காதலன் மணிகண்டராஜா கொலை செய்து 11 பவுன் நகையை பறித்து உடலை சாக்கு மூடையில் போட்டுவிட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மணிகண்டராஜாவுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.3000 அபராதமும் விதித்து நீதிபதி ராஜவேல் நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை