உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தி.மு.க., நகராட்சி தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தி.மு.க., நகராட்சி தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தென்காசி:செங்கோட்டை நகராட்சி தி.மு.க., தலைவிக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத தீர்மான ஓட்டெடுப்பில் அவர்கள் பங்கேற்காததால் அது தோல்வியடைந்தது.தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி தலைவியாக தி.மு.க.,வை சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இவர் சுயேச்சையாக போட்டியிட்டு வென்று அ.தி.மு.க., - பா.ஜ. உறுப்பினர்கள் ஆதரவுடன் நகராட்சி தலைவியாகி பின்னர் தி.மு.க.,வில் இணைந்தார்.மொத்தம் 24 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க.வினர் 10 பேரும், பா.ஜ.வினர் 3 பேரும் தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் நகராட்சி தலைவி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர டிச.,8ல் கமிஷனர் சுகந்தியிடம் மனு வழங்கினர்.திருநெல்வேலி மாநகராட்சியில் தி.மு.க. மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி, சங்கரன்கோவில் நகராட்சியில் தி.மு.க., தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி போல செங்கோட்டையிலும் தி.மு.க., கவுன்சிலர்களிடம் கட்சி மேலிடம் பேசி பிரச்னையை செட்டில் செய்தது. தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்ட அரங்கிற்கு வரவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ.,வை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்ததால் போதிய எண்ணிக்கை இல்லை எனக்கூறி தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி