உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / ஒரு மாத ஆண் குழந்தை பலி

ஒரு மாத ஆண் குழந்தை பலி

கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை யாரப் நகர் கீழ்கோட்டையை சேர்ந்தவர் சதாம், 26. டிரைவர். இவர் மனைவி ஐஷூ, 24. கெலமங்கலம் சுல்தான்பேட்டையில் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஐஷூவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன், ஆண் குழந்தை பிறந்தது.நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தாய் துாங்க வைத்தார். காலை, 8:05 மணிக்கு பார்த்த போது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை