உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / பட்டா மாறுதலுக்கு ரூ.4,500 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.4,500 லஞ்சம்; பெண் வி.ஏ.ஓ., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: பட்டா மாறுதலுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை(வி.ஏ.ஓ.,) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல். இவர், ராஜகோபாலகேரி கிராமத்தில், தனது தந்தையின் பெயரில் உள்ள சொத்தை தனது பெயரில் பட்டா மாறுதல் செய்ய கிராம வி.ஏ.ஓ., பத்மாவதியை அணுகி உள்ளார். அதற்கு அவர், ஆன்லைனில் விண்ணப்பிக்க கூறியுள்ளார். அதன்படி விண்ணப்பித்த பிறகு, மீண்டும் வி.ஏ.ஓ.,வை குமாரவேல் தொடர்பு கொண்டார். அப்போது, பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என பத்மாவதி கூறியுயுள்ளார். அவ்வளவு பணம் இல்லை என குமாரவேல் கூறியதைத் தொடர்ந்து ரூ.4,500 தர வேண்டும் என பத்மாவதி கேட்டுள்ளார். அதனை கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும் எனக்கூறியுள்ளார்.இதனை கொடுக்க விரும்பாத குமாரவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை குமாரவேல் கொடுத்தார். அதனை வாங்கிய பத்மாவதியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Kamaraj
ஜன 22, 2025 19:38

மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் மாரியப்பன் மீது எப்போ லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கும்


Bhaskaran
ஜன 22, 2025 14:06

இவள் ல்லாம் ஒரு அரசு ஊழியர் லஞ்ச பிசாசு


Perumal Pillai
ஜன 21, 2025 21:33

சார் , திருநெல்வேலி ஜில்லா பணகுடி சப் ரெஜிஸ்ட்ரார் ஐ எப்போது அரெஸ்ட் பண்ணுவீங்க ?


Anantharaman Srinivasan
ஜன 21, 2025 21:18

அங்கிங்கென்னாது எங்கும் லஞ்சம். லஞ்சம் இல்லையேல் காரியம் நடப்பதில்லை. நடந்து நடந்து அலைய வேண்டியது தான். லஞ்ச ஒழிப்புத்துறையிலும் எல்லோரும் உதவி புரிவார்களா அல்லது புகார் தருபவர்களையே காட்டிக்கொடுத்து விட்டால் என்ற பயமும் உள்ளது. மதுரையில் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் போது தாசில்தார் அலுவலகத்தில் அந்த பதிவில் தகப்பனார் பெயரை பட்டாவில் தவறாக பதிவு செய்துள்ளனர். நான்கு வருடமாக முயன்றும் மாற்ற முடியவில்லை. இப்போ சரி செய்ய இரண்டு லட்சம் கேட்கின்றனர்.


தாமரை மலர்கிறது
ஜன 21, 2025 20:38

திருட்டு திராவிடத்தில் லஞ்சம் அங்கீகாரம் பெற்றுள்ளது.


Kamaraj
ஜன 22, 2025 19:41

அப்படியே போய் ரபேல் வாங்குன கோப்பு எங்கன்னு சொல்லுங்க


கனகராஜன்
ஜன 21, 2025 20:37

இங்கு அடையாறு பத்திரப்பதிவு சார்பதிவாளர் , தைரியமாக, உரத்த குரலில், அதிகாரத் தோரணையுடன் லஞ்சம் கேட்கிறார். பின்புலம் இல்லாமல் அவரால் இப்படித் தைரியமாகச் கேட்க முடியாது.


sivakumar
ஜன 21, 2025 20:17

நீங்க ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை இல் புகாரளிக்கவில்லை?


Ramesh Sargam
ஜன 21, 2025 20:05

லட்சங்களில் லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் ஏன் சிக்குவதில்லை, ஏன் கைது செய்யப்படுவதில்லை. தூண்டில் சிறியதா..?


rama adhavan
ஜன 21, 2025 19:32

லஞ்ச குற்றவாளிகளுக்கு மரண தண்டனை/ ஆயுள் தண்டனை என நமது சட்டசபையில் சும்மா ஒரு தீர்மானம் போடலாமே? காசா, பணமா என்ன? நடைமுறையில் வரவா போகிறது?


r ganesan
ஜன 21, 2025 19:10

தமிழ் நாட்டு DMK தலைவர்கள் எப்படியோ தப்பித்தது விடுகிறார்கள். எப்படி என்றே புரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதும் இதே நிலை தான், ஆனால் ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் தண்டிக்கப்பட்டார்.


சமீபத்திய செய்தி