உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / பணம் கேட்டு தந்தையை கொன்ற மகன் கைது

பணம் கேட்டு தந்தையை கொன்ற மகன் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே பணம் கேட்டு தந்தையை குத்திக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே மலையான்குளத்தைச் சேர்ந்த விவசாயி செல்லையா 70. இவருக்கு கந்தசாமி, கணேசன், முருகையா ஆகிய மகன்களும், சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர். செல்லையா மனைவி பழனியம்மாள் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். செல்லையா மூன்றாவது மகன் முருகையா வீட்டில் வசித்து வந்தார்.அவர் தமது சொத்துக்களை வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்து விட்டார். மீதமுள்ள ரொக்கப்பணத்தை கையில் வைத்திருந்தார். எப்போதும் குடிபோதையில் தகராறு செய்யும் இரண்டாவது மகன் கணேசன், தந்தையிடம் தமக்கு பணம் தர தருமாறு கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவில் தந்தையிடம் இதுதொடர்பாக தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். இதில் செல்லையா பரிதாபமாக இறந்தார். குருவிகுளம் போலீசார் நேற்று கணேசனை கைது செய்தனர். கணேசனுக்கு திருமணமாகி மனைவி, நான்கு குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை