உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / கரடி கடித்து மூன்று பெண்கள் காயம் பொதுமக்கள் சாலை மறியல்

கரடி கடித்து மூன்று பெண்கள் காயம் பொதுமக்கள் சாலை மறியல்

தென்காசி:புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கரடி கடித்ததில் விவசாய தொழிலாளர் பெண்கள் மூன்று பேர் காயமுற்றனர். வனத்துறை அதிகாரிகள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் உள்ளன. தினமும் விவசாய பணியில் பெண்கள் ஈடுபடுவார்கள். நேற்று காலை திடீரென அங்கு வந்த கரடி ஒன்று பெண்களை கடித்தது. இதில் புளியங்குடி சேகூர் மைதீன் மனைவி சேகம்மாள் 52, தலையில் காயமுற்றார். அம்பிகா 44, ராமலட்சுமி 43 ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. சேகம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவரும் புளியங்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆகியும் வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு வரவில்லை. வனத்துறையை கண்டித்து புளியங்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென்காசி- -மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் புளியங்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி