உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தென்காசி கோவில் பொருளை டெம்போவில் கடத்தியது யார்?

தென்காசி கோவில் பொருளை டெம்போவில் கடத்தியது யார்?

தென்காசி:தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குத்து விளக்குகள் உட்பட பல்வேறு பொருட்கள் மாயமானது குறித்து, கோவில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் வழங்கிய வெள்ளி, பித்தளை, வெண்கல பொருட்களை சில தினங்களுக்கு முன், ஒரு டெம்போ வாகனத்தில், 10 பெட்டிகளில் சிலர் ஏற்றி செல்வது அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய கோவில் செயல் அலுவலர் பொன்னி, தென்காசி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், என்னென்ன பொருட்கள் காணாமல் போனது, அவற்றின் மதிப்பு குறித்த முழுமையான விபரம் இல்லாததால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவற்றை யார் எடுத்துச் சென்றது என்ற விபரம் தெரியவில்லை. கோவில் அர்ச்சகர் செந்திலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை