உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / சார்--பதிவாளருக்கு பளார் வாலிபர் சிறையிலடைப்பு

சார்--பதிவாளருக்கு பளார் வாலிபர் சிறையிலடைப்பு

கடையநல்லுார்:மேலநீலிதநல்லுார் சார்-பதிவாளர் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகே கம்பனேரியை சேர்ந்தவர் செல்லத்துரை, 30; முன்னாள் ராணுவ வீரர். சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லுார் சார்-பதிவாளர் அலுவலகத்தில், சார்-பதிவாளராக உள்ளார். நேற்று மதியம் அங்கு வந்த நபர் ஒருவர், தான் வாங்க உள்ள ஒரு இடத்திற்கு பத்திரப்பதிவு செய்து தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.ஆனால், அதற்கு போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், முறையான ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும் என, செல்லதுரை கூறியுள்ளார். இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த நபர், செல்லத்துரையை கன்னத்தில் அறைந்தார். புகாரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆயாள்பட்டியை சேர்ந்த முனீஸ் பாண்டி, 30, என்பவரை கைது செய்தனர். காயமடைந்த செல்லத்துரை, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை