உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.8.32 லட்சம் உதவி:தஞ்சை கலெக்டர் வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.8.32 லட்சம் உதவி:தஞ்சை கலெக்டர் வழங்கல்

தஞ்சாவூர்: தஞ்சையில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின் மூலம் எட்டு லட்சத்து 32 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரன் பயனாளிகளுக்கு வழங்கினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருவையாறு வட்டம், திருப்பழனம் கிராமத்தை சேர்ந்த வெங்கடசாலம் இறந்தமைக்காக அவரது மனைவி கற்பகத்திடம் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 500 ரூபாய்க்கான செக்கும், திருமண நிதியுதவி தொகையாக இரண்டு பயனாளிகளுக்கு தலா மூன்றாயிரம் ரூபாயம் வீதமும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி ஏழு பயனாளிகளுக்கு தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் என, மொத்தம் ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒரத்தநாடு வட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு தலா மூன்றாயிரம் ரூபாய் என, மொத்தம் 33 ஆயிரம் ரூபாய்க்கான செக்கும், உறுப்பினர் சார்ந்தோர் திருமண நிதியுதவியாக ஒரத்தநாடு வட்டத்தை சேர்ந்த நான்கு பயனாளிகளுக்கு தலா ஐந்தாயிரம் வீதம், 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், பட்டுக்கோட்டை வட்டம் பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் (அருந்தததியினர்) இனத்தை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு மனைப்பட்டாக்களும் வழங்கப்பட்டது. ஒரத்தநாடு வட்டத்தை சேர்ந்த ஆறு பயனாளிகளுக்கு தலா 12 ஆயிரத்து 500 ரூபாயும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவியாக 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், 12 பயனாளிகளுக்கு உறுப்பினர் சார்ந்தோர் நிதியுதவி 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், ஒரு பயனாளிக்கு மூன்றாயிரம் மதிப்பிலும் ஆக மொத்தம், ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பாபநாசம் வட்டத்தை சேர்ந்த நான்கு பயனாளிகளுக்கு குடும்ப தலைவர் இறந்ததுக்காக தலா பத்தாயிரம் வீதம் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலும், இரண்டு பயனாளிக்கு 12 ஆயிரம் மதிப்பிலும் என, மொத்தம் 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருந்திய மூன்று சக்கர சைக்கிள்களையும், ஆறு பயனாளிகளுக்கு தலா எட்டாயிரம் வீதம் 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், ஐந்து பயனாளிகளுக்கு தலா நான்கு ஆயிரம் ரூபாய் மதிப்பில், 20 ஆயிரம் மதிப்பிலான நாற்காலிகளும் வழங்கப்பட்டது. ஒரு பயனாளிக்கு நான்காயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளையும், ஒரு பயனாளிக்கு 800 ரூபாய் மதிப்பிலான ஊன்று கோலினையும், கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதுக்கான உத்தரவுகளையும் என, ஆக மொத்தம் இரண்டு லட்சத்து 75 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மொத்தத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தின் மூலம் எட்டு லட்சத்து 32 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் பாஸ்கரன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை