உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சை ராஜவீதிகளில் ஒரே இடத்தில் 25 பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா 

தஞ்சை ராஜவீதிகளில் ஒரே இடத்தில் 25 பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா 

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறை, ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில், 90ம் ஆண்டாவது கருட சேவை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம், வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு, திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.பின் வெண்ணாற்றங்கரையில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு, 7:00 மணி முதல் 12:00 மணி வரை ராஜவீதிகளில் வீதியுலா நடைபெற்றது. முதலில், அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானை வணங்கிய வண்ணம் முதலில் வர அவரை நீலமேகப்பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உட்பட 25 கோவில்களிலிருந்து பெருமாள் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். பாண்டுரங்கா பஜனை பாடல்கள். கோலாட்டத்துடன் கருட சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரினசம் செய்தனர்.பின்னர், இன்று நவநீத சேவையை முன்னிட்டு, வெண்ணாற்றங்கரையில் இருந்து 16 கோவில்களில் இருந்து பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி, ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கவுள்ளனர். தொடர்ந்துமே 31ம் தேதி காலை 9:00 மணியளவில் விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை