மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள பஸ் ஸ்டாண்டில், நகராட்சி நிர்வாகம் சார்பில், 100 அடி நீள பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த அந்த விழிப்புணர்வு விளம்பர பிளக்ஸ் போர்டு, பயணியர் அமரும் நிழற்குடையின் முகப்பில் வைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் நேற்று காலை வீசிய காற்றில், 100 அடி நீளம் உள்ள பிளக்ஸ் போர்டு கழன்று கீழே விழுந்தது. பிளக்ஸ் போர்டு கீழே விழுந்த போது, யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.உடன், அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் அதை அப்புறப்படுத்தினர். இதில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததால் நகராட்சி அலுலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இது குறித்து பயணியர் கூறியதாவது:பஸ் ஸ்டாண்டில் அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில், பயணியர் அமரும் வகையில் தகர ஷீட்டில் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் முகப்பில் இரும்பு கம்பிகளில் பொருத்தப்பட்டிருந்த, 100 அடி நீளமுள்ள பிளக்ஸ் இருந்தது.துருப்பிடித்து தொங்கிக் கொண்டு இருந்த அதை, நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொண்டுவில்லை. சிறிய காற்று அடித்ததில் கீழே விழுந்தது. எனினும், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பயணியர் நடமாடும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், ஸ்திரமாக உள்ளனவா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025