உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஊருக்குள் புகுந்த முதலை கும்பகோணத்தில் பரபரப்பு

ஊருக்குள் புகுந்த முதலை கும்பகோணத்தில் பரபரப்பு

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கடம்பங்குடி, களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் காசிராஜன். இவரது தோட்டத்துக்குள் முதலை சென்றதை மக்கள் பார்த்துள்ளனர்.சோழபுரம் போலீசார் மற்றும் வனத்துறையினர் தோட்டத்தில் புகுந்த, 4 அடி நீளம் உடைய முதலையை பிடித்து, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர்.அப்பகுதியினர் கூறியதாவது:கொள்ளிடம் அணைக்கரையில் ஏராளமான முதலைகள் உள்ளன. இங்கு முதலைகள் பாதுகாப்பகம் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். தண்ணீர் குறைவான காலங்களில் ஆற்றுக்கு செல்லும் கால்நடைகள், மனிதர்களை முதலைகள் தாக்கி வருகின்றன.கொள்ளிடம் ஆறு வறண்டு இருப்பதால், அங்கிருக்கும் முதலைகள் இரை தேடி ஊருக்குள் வருகின்றன.இதனால், ஆடு, கோழி, கன்றுக்குட்டிகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. முதலைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

lalbahadur
மே 04, 2024 23:11

முதலைகளும், இவ்வுலகத்தில் வாழ, முழு உரிமை உண்டு அவைகளை, நாம் தான் கருணையோடு, உதவி செய்து, காப்பாற்ற வேண்டும்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ