மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி சேர்மனும், பா.ம.க., தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலருமான ஸ்டாலின், நேற்று காலை காரில், கோவை சென்று கொண்டிருந்தார். அப்போது, பந்தநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா, மிரட்டும் வகையில் அவரிடம் மொபைல் போனில் பேசியுள்ளார்.இதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி.,யை தொடர்பு கொண்ட ஸ்டாலின் விபரங்களை கூறியுள்ளார். அது தொடர்பாக புகார் மனு ஒன்றையும் அனுப்பியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய எஸ்.பி., ஆஷிஷ் ராவத், உடனடியாக, இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ண ராஜாவை, தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ண ராஜாவை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, பா.ம.க., மாவட்ட செயலர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025