உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / வியாபாரிகள் உருவாக்கிய மலர் வணிக வளாகம் திறப்பு

வியாபாரிகள் உருவாக்கிய மலர் வணிக வளாகம் திறப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பூச்சந்தையில் வியாபாரிகள் பூ விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பூ வியாபாரிகளுக்கும், சந்தையின் வாகன ஏலதாரருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, வியாபாரிகளில் சிலர் தனியார் திருமண மண்டபத்தில், வியாபாரம் செய்தனர்.இதற்கிடையில், தனியார் ஏலத்தை ரத்து செய்து, மீண்டும் கோவில் நிர்வாகமே சந்தையை ஏற்று நடத்தியது. மேலும், வெளியேறிய வியாபாரிகளை, மீண்டும் வர அழைப்பு விடுத்து, பேச்சு நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.இதனால், தஞ்சாவூர் பூ வியாபாரிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகத்திடம் வியாபாரத்திற்கு இடம் கேட்டு முறையிட்டும், இடம் வழங்கவில்லை. இதையடுத்து நாகை சாலையில் 21,000 சதுர அடி இடத்தை வியாபாரிகள் வாங்கி, அதில் 9,600 சதுர அடியில் நவீன சந்தையை உருவாக்கினர். ஏராளமான வசதிகளுடன் மலர் வணிக வளாகம் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை