உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் என கூறி  பணம் பறித்த மேசாடி தம்பதிக்கு 2 ஆண்டு சிறை  

கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் என கூறி  பணம் பறித்த மேசாடி தம்பதிக்கு 2 ஆண்டு சிறை  

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் கடந்த 2021ம் ஆண்டில் பிரபல மருத்துவமனை டாக்டர்கள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் என பலரிடம், கோயம்புத்துார் மாவட்டம் சித்தாபுதார் பகுதியை சேர்ந்த சந்தானபாரதி,47, அவரது மனைவி ரீட்டா பபியோலா,53, ஆகிய இருவரும், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் என அறிமுகம் செய்துக்கொண்டு, அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், தலா 50 ஆயிரம் அனுப்புமாறு, வங்கி கணக்கு விபரங்களை அனுப்பி வைத்துள்ளார். அவரது பேச்சில் சந்தேகமடைந்த பலர், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சந்தானபாரதி அவரது மனைவி ரீட்டா பபியோலா இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சந்தானபாரதி சென்னை,திருப்பூரில் மோசடி வழக்கில், இரண்டு முறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். கடந்த 2017ம் ஆண்டு வேலுார், நீலகிரி, 2019ம் ஆண்டு கரூர் கலெக்டர்கள் பெயரை கூறி பலரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இவ்வழக்கு தஞ்சாவூர் நீதிதுறை நடுவர் நீதிமன்றம் எண்:1ல் நடந்து வந்தது. நீதிபதி எஸ். சுசீலா வழக்கை விசாரணை செய்து, குற்றம்சாட்ட சந்தானபாரதி அவரது மனைவி ரீட்டா பபியோலா ஆகிய இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை