மேலும் செய்திகள்
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
05-Oct-2025
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்:தமிழகத்தில் மேட்டூர் அணை பாசனம் மூலம், 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. நடப்பு நீர் பாசன ஆண்டில், 91வது ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு, ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், அணையின் நீர்மட்டம் 43.71 அடியாகவும், நீர்வரத்து 390 கனஅடியாகவும் உள்ளது.மேலும், அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1,802 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே, பாசனத்திற்கு இந்தாண்டு தண்ணீர் திறக்க முடியாத சூழலில் தமிழக அரசு உள்ளது. இதனால் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.இந்நிலையில், பம்புசெட், கோடையில் பெய்த மழையை நம்பி, குறுவை சாகுபடியை டெல்டாவில் விவசாயிகள் செய்துள்ளனர். சிறப்பு குறுவை தொகுப்பு இந்தாண்டு கிடைக்குமா என காத்திருக்கின்றனர். எனவே, மேலும், சிறப்பு குறுவைத் தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-Oct-2025
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025