உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மரத்தை மறுநடவு செய்ய கோரிக்கை

மரத்தை மறுநடவு செய்ய கோரிக்கை

தஞ்சாவூர்:தஞ்சாவூர், கரந்தை கிருஷ்ணன் கோவில் எதிரே பழமையான நான்கு அரச மரங்கள் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பகல் நேரத்தில் நிழலை தந்து அந்த பகுதியை குளிர்ச்சியாக வைத்துள்ளது இந்த அரச மரங்கள்.இந்நிலையில், தஞ்சாவூர் - கும்பகோணம் பிரதான சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை அகலப்படுத்த அரசமரங்கள் இடையூறாக இருப்பதாக கூறி, அந்த மரங்களை அடியோடு வெட்டி அகற்ற முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதியினர், பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நிழலை தந்து கொண்டிருந்த இந்த மரங்களை வெட்டாமல் வேரோடு பிடுங்கி மறுநடவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ