மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 4 பேர் சாவு
15-Dec-2025
மாணவனுக்கு தொல்லை; சக மாணவர்கள் 4 பேர் கைது
15-Dec-2025
சிறுமிக்கு தொல்லை ஆசிரியருக்கு கம்பி
13-Dec-2025
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு 2,308 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடி மையங்களில், பாதுகாப்பு பணியில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்படி கடந்த 18ம் தேதி முதல் நேற்று வரை பணியில் இருந்தனர்.இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, எஸ்.பி., அலுவலகம் சார்பில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 3,000 ஊக்கத்தொகை வழங்குவதாக போலீசார் கூறினர்.ஆனால், தேர்தல் ஆணையத்தின் அரசாணையில் 4,000 ரூபாய் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி 4,000 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி, 3,000 ரூபாயை பெற முடியாது என வலியுறுத்தி, ஆயுதப்படை மைதானம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தைக்குப்பின் கலைந்தனர். மேலும், பணியில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது.
15-Dec-2025
15-Dec-2025
15-Dec-2025
13-Dec-2025