மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொல்லை டிரைவருக்கு போக்சோ
27-Dec-2025
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
ரெட்டவயல்:தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சேர்ந்த கழனிவாசல் கிராமம் ரேஷன் கடையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரென தீ பற்றியது. அப்பகுதியினர் பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புப் படை வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், ரேஷன் கடையில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த, 2,500 காலி சணல் சாக்குகள், 55 மூட்டை அரிசி, ஐந்து மூட்டை சர்க்கரை, 100 கிலோ பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. மற்றொரு கட்டடத்தில் மண்ணெண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அங்கு தீ பரவாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.விபத்துக்கான காரணம் குறித்து பேராவூரணி போலீசார், ரேஷன் கடை விற்பனையாளர் ஆறுமுகம் அளித்த புகாரின்படி, விசாரிக்கின்றனர்.பொது வினியோக திட்ட அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
27-Dec-2025
15-Dec-2025