மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், மனோரா பகுதியில், இளைஞர் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று காலை சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் வந்தது. விசாரணையில், இறந்தவர் மல்லிப்பட்டினம், செம்பருத்தி நகரை சேர்ந்த ராஜா, 36, என, தெரியவந்தது. இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனர்.ராஜாவின் தாய் நாகேஸ்வரி, 55, புகாரின்படி, போலீசார் விசாரித்ததில், மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகர் விக்னேஷ்வரன், 22, அவரது தம்பியான 17 வயது சிறுவன், அவர்கள் வளர்ப்பு தந்தை பத்துக்காடு கிராமத்தை சேர்ந்த குமார், 51, ஆகிய மூன்று பேரும் ராஜாவை கொலை செய்தது தெரிந்தது.இறந்த ராஜாவுக்கும், விக்னேஷ்வரன் தாய் அபூர்வத்துக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதையறிந்த விக்னேஷ்வரன், அவரது தம்பி 17 வயது சிறுவன், குமார் ஆகிய மூவரும் சேர்ந்து, நேற்று முன்தினம் ராஜாவை மது அருந்த அழைத்து சென்று, அடித்துக் கொன்று, உடலை கருவேலகாட்டில் வீசியுள்ளனர்.விக்னேஷ்வரன் தாய் அபூர்வத்தின் முதல் கணவர் அவரை விட்டு சென்ற நிலையில், குமாருடன் குடும்பம் நடத்தியுள்ளார். 3வதாக ராஜாவுடன் மூன்று மாதங்களாக தொடர்பில் இருந்த ஆத்திரத்தில், 2வது கணவரும், மகன்களும் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. சேதுபாவாசத்திரம் போலீசார் விக்னேஷ்வரன், குமார், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025