உள்ளூர் செய்திகள்

நேற்றைய போக்சோ

சிறுமி கர்ப்பம்: கணவர் மீது வழக்கு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலத்துறை, சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ், 22. கடந்த 2024 செப்., 16ம் தேதி, தான் காதலித்த 16 வயது சிறுமியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தற்போது சிறுமி இரு மாத கர்ப்பிணி. தகவலறிந்த பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார், சுபாஷ் மீது போக்சோ சட்டத்தில் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.சுபாஷின் தாய் சுமதி, 50, தந்தை ராஜேந்திரன், 56, சிறுமியின் பெற்றோர் என, நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

4 வயது சிறுமிக்கு தொல்லை

திருச்சி: திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், அதே பகுதியில் வசிக்கும், 4 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, முசிறி அனைத்து மகளிர் போலீசார், சிறுவனை போக்சோ வழக்கில், நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை