உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பாலிஷ் போட்டு தருவதாக கூறி நகை திருடிய 15 வயது சிறுவன்

பாலிஷ் போட்டு தருவதாக கூறி நகை திருடிய 15 வயது சிறுவன்

தஞ்சாவூர்:தஞ்சாவூர், ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி எழுவாக்கல், 54. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், இவரிடம், குறைந்த விலையில் தங்க நகைகளை பாலிஷ் போட்டு தருவதாக கூறினார். எழுவாக்கலும், 2.25 சவரன் செயினை, சிறுவனிடம் பாலிஸ் போட கொடுத்தார். சிறுவன், ஒரு திரவத்தில் நகையை போட்டு உலர்த்தியுள்ளான். அப்போது, மூன்று துண்டுகளாக நகை உடைந்து போனது. உடனே, சிறுவன் லாவகமாக துண்டு நகைகளை மறைத்து வைத்துக்கொண்டு, உடைந்த செயினை பற்ற வைத்து, பாலிஷ் போட்டு விட்டதாக கூறி, நகையை கொடுத்து விட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டான். நகையை வாங்கிய எழுவாக்கல், எடை குறைந்துள்ளதை உணர்ந்துள்ளார். அருகில் உள்ள நகை கடையில் சென்று எடை போட்டு பார்த்ததில், 1 சவரன் மட்டுமே இருந்தது. மீதி, 1.25 சவரன் நகையை சிறுவன் நுாதன முறையில் திருடியதை அவர் உணர்ந்துள்ளார். எழுவாக்கல் புகாரில், கள்ளபெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் நேற்று சுற்றிதிரிந்த வடமாநில சிறுவனை கைது செய்து, தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை