மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
மன்னார்குடி: ஜேசீஸ் வாரவிழாவையொட்டி, மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. உலகம் முழுவதும் உள்ள ஜேசீஸ் சங்க உறுப்பினர்களால், ஜேசீஸ் வாரவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜேசீஸ் வார விழாவையொட்டி, மன்னார்குடி ஜேசீஸ் சங்கம் சார்பில் எடஅன்னவாசல் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு சங்கத் தலைவர் ராஜகுமார் தலைமை வகித்தார். கிராமப் பெரியவர் பட்டாணித்தேவர், தரணி நிறுவனங்களின் தலைவர் காமராஜ், ஜேசீஸ் முன்னாள் மண்டலத்தலைவர் கோவிந்தராஜன், மண்டலத்துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் ராமதாஸ், செயலாளர் அன்பரசு உட்பட பலர் பங்கேற்றனர். இந்திய மருத்துவக்கழகத்தின் மன்னார்குடி கிளைத்தலைவர் டாக்டர் சித்ரா, டாக்டர் நாகராஜன் பொதுமக்களை பரிசோதித்து, மருத்துவ ஆலோசனைகளையும், மருந்துகளையும் இலவசமாக வழங்கினர். முகாமில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு, மன்னார்குடி குரு ரத்தப்பரிசோதனை நிலைய நிறுவனர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. நீரிழிவு நோய் கண்டறிப்பட்ட 62 பேருக்கு, உரிய ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025