உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குடந்தை நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,- தி.மு.க., மனு தாக்கல்

குடந்தை நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,- தி.மு.க., மனு தாக்கல்

கும்பகோணம்: கும்பகோணம் நகர்மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் ரத்னாசேகர் நேற்று கும்பகோணம் நகராட்சி ஆணையர் வரதராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கும்பகோணம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக கும்பகோணம் நகர அ.தி.மு.க., செயலாளர் சேகரின் மனைவி ரத்னாசேகர் அறிவிக்கப்பட்டார். அதே போல் கும்பகோணத்தில் உள்ள 45வார்டுகளின் அ.தி.மு.க., வேட்பாளர்களும் அறிவிக்கப் பட்டது. இதையடுத்து அமாவாசை தினமான நேற்று காலை 11 மணிக்கு கும்பகோணம் காந்தி யடிகள் சாலையிலிருந்து அ.தி.மு.க., தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ., ரெங்கசாமி தலைமையில் நகர்மன்ற வேட் பாளர் ரத்னாசேகர் மற்றும் 45வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கட்சி முன்னணியினர் ஊர்வலமாக புறப்பட்டு பிர்மன் கோயில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித் தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நகர முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் நகராட்சியை நேற்று மதியம் 1 மணிக்கு வந்தடைந்தனர். அங்கு நகராட்சி ஆணை யரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வரதராஜ னிடம் நகர்மன்ற அ.தி.மு.க., வேட்பாளராக ரத்னாசேகர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட் பாளராக முன்னாள் நகர்மன்ற தலைவர் லதாமனோகரன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது, மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி எம். எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ராம.ராமநாதன், நகர அ.தி.மு.க., செயலாளர் சேகர், குடந்தை சட்டசபை தொகுதி செயலாளர் தம்பி தேவரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதே போல் கும்ப கோணத்தில் உள்ள 45 வார்டுகளின் அ.தி.மு.க., வேட்பாளர்கள் நகராட்சி உதவி தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தி.மு.க., வேட்பாளர் மனுத்தாக்கல்: கும்பகோணம் நகர்மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் பொறியியல் பட்டதாரி புவனேஸ்வரி(37) நேற்று கும்ப கோணம் நகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வரதராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். கும்பகோணம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளராக, மால பொதுக்குழு உறுப்பினரும், கும்பகோணம் நகர தி.மு.க., பொருளாளருமான ராசாராமனின் மருமகளும், பொறியியல் பட்டதாரியுமான புவனேஸ்வரி(37) அறிவிக்கப் பட்டார். அதே போல், 45வார்டுகளின் தி.மு.க., வேட்பாளர்களையும் அறிவித்து ள்ளார். இதையடுத்து அமாவாசை தினமான நேற்று காலை மகாமககுளம் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் தி.மு.க.,வினர் ஊர்வலமாக புறப்பட்டு நகர முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தனர்.அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வரதராஜனிடம் புவனேஸ்வரி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக கஸ்தூரி சுந்தரபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், நகர்மன்ற தலைவர் தமிழழகன், நகர தி.மு.க., பொருளாளர் ராசாராமன், நகர தி.மு.க., துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை