உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / 30,000 ஏக்கர் பாதிப்பு விவசாயிகள் கண்ணீர்

30,000 ஏக்கர் பாதிப்பு விவசாயிகள் கண்ணீர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:அக்டோபர் மாதம் குறுவை அறுவடையின் போது மழை பெய்து, அறுவடை பாதிக்கப்பட்டது. அதே போல, சம்பாவும் அறுவடை நேரத்தில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடியில், 31,000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !