உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / அரசு பஸ் கண்டக்டருக்கு காப்பு

அரசு பஸ் கண்டக்டருக்கு காப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர், நேற்று முன்தினம், பட்டுக்கோட்டையில் பள்ளி ஒன்றில் நடந்த, அரசு திறனாய்வு போட்டி தேர்வு எழுதி விட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில், கண்டக்டராக பணியில் இருந்த பாபநாசம் அருகே நரியனுாரை சேர்ந்த சுதாகர், 47, பஸ்சில் கூட்டம் இல்லாத சூழலில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகாரின்படி, ஒரத்தநாடு மகளிர் போலீசார், சுதாகரை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ