மேலும் செய்திகள்
போலி நகை அடகு வைத்து மோசடி; இருவர் கைது
14-Nov-2025
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கரந்தை பகுதியை சேர்ந்த வள்ளிமனாளன் என்பவர், நகை அடகு கடை வைத்துள்ளார். இவரின் கடையில், சேலம் மாவட்டம், கொண்டாலம்பட்டியை சேர்ந்த ஏழுமலை, 58, என்பவர், போலி நகைகளை அடகு வைத்து, 2.35 லட்சம் ரூபாய் பெற்றது தெரிந்தது. இதுகுறித்து, வள்ளிமனாளன் கிழக்கு காவல் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், ஏழுமலையை நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடம் இருந்த, 2.35 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
14-Nov-2025