உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குளம் துார் வாரும் பணிக்கு ரூ.50,000 வழங்கிய எம்.எல்.ஏ.,

குளம் துார் வாரும் பணிக்கு ரூ.50,000 வழங்கிய எம்.எல்.ஏ.,

பேராவூரணி: குளம் துார் வாரும் பணிக்காக, பேராவூரணி எம்.எல்.ஏ., 50,000 ரூபாயை நேற்று வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அம்மையாண்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பஞ்சநதிபுரம் கிராமத்தில் உள்ள உள்ளிக்குளம், பல ஆண்டுகளாக துார் வாராமல், நீரை தேக்கி வைக்க வழியின்றி இருந்தது. இப்பகுதி மக்கள் குளத்தை துார்வார முடிவு செய்தனர். இதையடுத்து, கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கமான 'கைபா' அமைப்புடன், துார்வாரும் பணியை முன்னெடுத்தனர். இப்பணியை அக்., 13ல் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், பேராவூரணி தி.மு.க., - எம்.எல்ஏ., அசோக்குமார், கைபா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோரால் துவக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று துார்வாரும் பணியை பார்வையிட்ட, எம்.எல்.ஏ., அசோக்குமார், கிராம மக்களை பாராட்டினார். பின், துார்வாரும் பணிக்காக தன் தொகுதி பங்களிப்பு தொகை 50,000 ரூபாயை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ