உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / போராட்டம் நடத்த ஓய்வூதியர்கள் முடிவு

போராட்டம் நடத்த ஓய்வூதியர்கள் முடிவு

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நேற்று, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம், கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தராஜு தலைமையில் நடந்தது.கூட்டத்தில், 'பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல், குறைந்தபட்ச பென்ஷன் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 108 மாதகால அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவிடும் முழு தொகையையும் திரும்ப வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.மேலும், தி.மு.க., தேர்தல் காலத்தில் அரசு, பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அனைத்து ஓய்வூதி யர்களுக்கும் அறிவித்த, அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி வரும் டிச., 3ம் தேதி, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன், அரைநாள் தர்ணா போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ