உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  சிறுமிக்கு தொல்லை டிரைவருக்கு போக்சோ

 சிறுமிக்கு தொல்லை டிரைவருக்கு போக்சோ

தஞ்சாவூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர், 'போக்சோ'வில் நேற்று கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் ஏழா-வது படிக்கும், 11 வயது சிறுமி. இவர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினருக்கு உதவி செய்ய தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று காலை, வார்டுக்கு வந்த கும்பகோணம் அருகே நாககுடியை சேர்ந்த டிரைவர் ராமகிருஷ்ணன், 32, என்பவர், துாங்கி கொண்டிருந்த சிறுமிக்கு தொல்லை கொடுத்து, மொபைலில் போட்டோ எடுத்தார். அருகில் உள்ளவர்கள், ராமகிருஷ்ணனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார், போக்சோவில் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி